இந்தியாவிலிருந்து மாலத்தீல் உள்ள மாலே துறைமுகத்திற்கு இன்று முதல் நேரடி கப்பல் சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தக் கப்பல் வரும்7-ம் தேதி அன்று மாலே துறைமுகத்தை
இந்த சேவையை துவக்கி வைத்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசுகையில், 'இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த கப்பல் சேவை மேலும் ஒரு மைல்கல்லாக அமையும். இந்த கப்பல் சேவை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதோடு மாலத்தீவு மற்றும் இந்திய மக்களிடையே நல்லுறவினை மேம்படுத்தும்' என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் பேசுகையில், 'வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறைந்த செலவில் நிறைந்த சேவைகளை வழங்கும். இந்தியாவிற்கும் மாலத்திற்கும் இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 323.9 மில்லியன் அமெரிக்கா டாலர்களாக அதிகரித்துள்ளது' என்றார்.