இந்தியாவில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. கேரளாவில் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதையடுத்து 7 தொகுதிகளில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் கேரளா, புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றுள்ளார். கிட்டதட்ட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சாண்டி உம்மன். தொடர்ந்து 50 ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த புதுப்பள்ளி தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியுள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாஜக வசமிருந்த துப்குரி என்ற தொகுதியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ். கிட்டதட்ட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுளது திரிணாமுல் காங்கிரஸ். பின்னர், திரிபுராவில் தன்பூர் தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது.