'5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ' - இது தான் காரணமா?

நாட்டின் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டுத் தொழில் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் புதிய செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது
ISRO
ISRO

5 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பழைய செயற்கைக்கோளுக்குப் பதிலாக புதிய செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 29 ஆம் தேதி செலுத்துவதற்குத் இஸ்ரோ தயாராகி வருகிறது. இதனை, இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இந்திய பிராந்திய செயற்கைகோள் அமைப்பான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்று வட்டப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் சாய்வான புவி ஒத்திசைவு பாதையிலும் வைக்கப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டு செயற்கைக்கோளுடன் சார்ந்து இருப்பதை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.பி.எஸ் போன்ற அமைப்புகளுக்கு வெளிநாடுகளை நம்புவது நம்பகத்தன்மையாக இருக்காது என்பதாலும், சேவைகள் மற்றும் தரவுகள் இந்தியாவிற்கு மறுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாலும், உள்நாட்டு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும் போது, நாட்டின் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டுத் தொழில் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் இந்த புதிய செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. செயற்கைக்கோளுக்கு ஏற்றவாறு நீள் வட்டப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com