கர்நாடகா: களம் இறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? கிடைத்தது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக தேர்தல்
கர்நாடக தேர்தல்

கர்நாடகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சொத்து விபரங்களை ஏ.டி.ஆர் என்ற ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், அதிக சொத்துக்கள் கொண்டவராக சுயேச்சை வேட்பாளர் யூசுப் செரிப் முதல் இடத்தில் உள்ளார். இவர், பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இவருக்கு மொத்தம் ரூ.1633 கோடி சொத்து உள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோடீஸ்வர வேட்பாளரான இவர் 20931 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இதில் 2வது இடத்தில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதி பா.ஜ.க வேட்பாளரான என்.டி.பி நாகராஜூ உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,609 கோடியாக உள்ளது.

இவர் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பா.ஜ.க-வுக்கு தாவிய நிலையில் எம்.எல்.சி-யாக உள்ளதோடு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 102145 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கனகபுரா சட்டசபை தொகுதி வேட்பாளருமான டி.கே.சிவக்குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடியாக இருக்கும் நிலையில் தேர்தலில் 143023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து 4வது இடத்தில் பெங்களூரு கோவிந்தராஜ நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியக் கிருஷ்ணா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,156 கோடி ரூபாயாக உள்ள நிலையில் 82134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

5வது இடத்தில் பெங்களூரு ஹெப்பால் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பைரதி சுரேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.648 கோடியாக இருக்கும் நிலையில் 91838 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

6வது இடத்தில் பெங்களூரு சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஏ ஹாரீஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.439 கோடியாக உள்ள நிலையில் 61030 வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.

இந்த பட்டியலில் 7வது இடத்தில் ஹாசன் மாவட்டம், பேலூர் சட்டசபை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.கே சுரேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.435 கோடியாக இருக்கும் நிலையில் தேர்தலில் 63571 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதில் 7வது இடத்தில் பெங்களூரு பொம்மனஹள்ளி ஜே.டி.எஸ் வேட்பாளர் நாராயண் ராஜூ உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.416 கோடியாக உள்ள நிலையில் 3445 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து இருக்கிறார்.

இதில் 8வது இடத்தில் பல்லாரி தொகுதி ஜே.டி.எஸ் வேட்பாளர் அனில் லாட் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜே.டி.எஸ் கட்சிக்கு தாவிய நிலையில் இவரது சொத்து மதிப்பு ரூ.380 கோடியாக இருக்கிறது. இந்த தேர்தலில் அனில் லாட் 610 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இந்த பட்டியலில் 9வது இடத்தில் உத்தர கன்னடா (கார்வார்) மாவட்டம் ஹலியால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான தேஷ்பாண்டே ரகுநாத் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.363 கோடியாக இருக்கும் நிலையில் 57240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com