்தியாவின் சச்சின் மீனாவும், பாகிஸ்தானின் சீமா ஹைதரும் ஜாமீன் கிடைத்து புதுடெல்லி சிறையில் இருந்து வெளியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமா ஹைதரை கடந்த ஜூலை 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். சீமா தனது ஏழு வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளுடன், சச்சின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் ஜோடியின் காதல் கதை ஒரு பாலிவுட் திரைப்படத்தைப் போலவே சுவாரஸ்யமானது. கோவிட் ஊரடங்கின்போது(PUBG) என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடும் போது அவர்கள் தொடர்பு கொண்டனர். இந்த செயலி மூலம் அவர்கள் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். சீமாவுக்கு 30 வயது. சச்சின் 25 வயது இளைஞன். அவர்களின் முதல் சந்திப்பின்போது இந்த ஆண்டு மார்ச் மாதம் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து சீமா ஹைதர் கூறுகையில், "இது ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணம். நானும் மிகவும் பயந்தேன். நான் முதலில் கராச்சியில் இருந்து துபாய்க்கு சென்றேன். அங்கு நாங்கள் 11 மணிநேரம் காத்திருந்தோம். தூங்க முடியவில்லை. நாங்கள் நேபாளத்திற்கு பறந்தோம். இறுதியாக போக்ராவுக்குச் செல்லும் பாதையில் சென்றோம். நான் சச்சினை அங்கே தான் முதன் முதலில் சந்தித்தேன்" என்கிறார்.