'புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவைப் புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதம்' - ஜெகன் மோகன் ரெட்டி

அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பெருமைமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
New Parliament
New Parliament

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவைப் புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பழமையான நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 250 உறுப்பினர்களும் அமர்வதற்கான வசதி உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமையும் படி வசதிகள் அமைந்துள்ளது. மேலும், இந்தியா சுதந்திரம் அடையும் போது அதிகாரப் பரிமாற்றத்தைக் குறிப்பதற்காக வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோலானது அப்போதைய பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டது.

Modi
Modi

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வருகிற 28 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் திறக்கப்படும் என மக்களவைச் செயலகம் உறுதிப்படுத்தியது. இந்த கட்டடத்தைப் பிரதமர் மோடி திறக்கக் கூடாது, குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங், திறப்பு விழா அழைப்பிதழை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பினார். ஆனால், அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இதையும் படிக்க 👇

New Parliament
'தி கேரள ஸ்டோரி திரைப்படம்' - மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கிய கல்லூரி நிர்வாகம்
Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில்,"பிரம்மாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததற்காகப் பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன். ஜனநாயகத்தின் கோயிலாக இருப்பதால், நமது தேசத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது. நமது நாட்டு மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது. இத்தகைய மங்களகரமான நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பெருமைமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில், எனது கட்சி இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com