கடன் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி. சுரேஷ்-க்கும், டாக்டர் அதுல் சாக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில், டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். 3 மாதங்களுக்கு பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் விராவல் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் அதுல் சாக். இவருக்கும் பா.ஜ.க எம்.பி. சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, பல்வேறு தவணையாக ரூ.1.75 வரை டாக்டர் அதுல் சாக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கடன் வாங்கியுள்ளார்.
நீண்ட நாள் ஆனதால், கொடுத்த கடனை டாக்டர் அதுல் சாக் திருப்பி கேட்டுள்ளார். இதில், இருதரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், டாக்டருக்கு பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த டாக்டர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், தனது தந்தை தற்கொலைக்கு காரணமான பா.ஜ.க எம்.பி. சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பா.ஜ.க எம்.பி. மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதனையத்து, 3 மாதங்களுக்கு பின்னர், பா.ஜ.க. எம்.பி. ராஜேஷ் மற்றும் அவரது தந்தை நரன்பாய் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களைக் கைது செய்யவில்லை.
பா.ஜ.க. எம்.பி. ராஜேஷ் மற்றும் அவரது தந்தை நரன்பாய் ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.