"ஒரு ஆண் இந்துவாக இருந்தாலும் அல்லது முஸ்லீமாக இருந்தாலும் எந்த மதத்தை சார்ந்தவாக இருந்தாலும் பரவாயில்லை, யாருக்கும் பல மனைவிகள் இருக்க முடியாது" என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937 ன் விதிகள் இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவுடன் ஒரே மாதிரியான சட்டத்தை மாநிலக் கொள்கையின் கொண்டுதொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க அஸ்ஸாம் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
"நாங்கள் சட்டத்தை நோக்கிச் செல்லவில்லை, அதற்காக தேசிய ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். மத்திய அரசு முன்முயற்சி எடுக்கும். ஆனால், அஸ்ஸாம் சட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் பலதார மணத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
மாநிலச் சட்டத்தின் மூலம் பலதார மணத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது என அறிவிக்க அசாம் அரசு உத்தேசித்துள்ளது. அஸ்ஸாமில் பலதார மணத்தை தடை செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதை நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும்.
இந்த குழு சட்ட வல்லுநர்களுடன் விரிவான விவாதங்களில் ஈடுபட்டு, நல்ல முடிவை எடுக்கும். நாங்கள் இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவோம். ஆனால், இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால் அதனை ஆலோசித்து வருகிறோம்’’ என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
பலதார மணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முந்தைய உத்தரவுகளை அடிப்படை ஆவணமாக வைத்து ஆலோசிக்கப்படும். அஸ்ஸாமில் குழந்தை திருமணங்கள் மீதான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். குழந்தை திருமணங்களை ஒடுக்குவது தொடர்பாக அஸ்ஸாம் அரசு தனது முயற்சிகளை மும்மடங்கு செய்யும்.
எதிர்காலத்தில் தொடர் கைதுகள் அதிகரிக்கும். குழந்தைத் திருமணங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குழந்தை திருமணத்தை தடுக்க அஸ்ஸாம் அரசு நடவடிக்கை எடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 2026-க்குள் குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வரும். அதை உறுதி செய்ய நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் ” என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.