அகில இந்திய வானொலி நிலையத்தின் சார்பில் ஒலிபரப்படும், பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் 100-வது நிகழ்வை கொண்டாடும் வகையில், இன்று 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 என ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதேபோல, ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன.
இந்த நிலையில், தற்போது 100 ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலி நிலையத்தின் சார்பில் ஒலிபரப்பப்படுகிறது. பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் 100-வது நிகழ்வை கொண்டாடும் வகையில், இன்று 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.
இந்த நாணயத்தில் சிங்க முகங்கள் கொண்ட அசோகர் தூண் பொறிக்கப்பட்டு இருக்கும். அதேபோல, சத்யமேவ ஜயதே என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும். பாரத் என தேவநாகரி மொழியிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
இந்த 100 ரூபாய் நாணயம் 44 மில்லி மீட்டர் விட்டத்தில் 35 கிராம் எடையுடன் இருக்கும். 50 சதவீத சில்வர், 40 சதவீத காப்பர், 05 சதவீத நிக்கல் மற்றும் 05 சதவீத துத்தநாகம் கலப்பில் இந்த நாணயம் அச்சிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.