ITC ஹோட்டல்களில் டிசம்பர் 31 முதல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை...
நாட்டில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 31 முதல் ஐடிசி ஹோட்டல் (ITC Hotel) நிர்வாகம், அதனுடைய அனைத்து ஹோட்டல்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஐடிசி ஹோட்டல் மற்றும் வெல்காம் ஹோட்டலின் தலைமை நிர்வாகி தீபக் ஹக்ஸர், தங்களது ஹோட்டல், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துடன் இணக்கமான உண்மையான உள்நாட்டு அனுபவங்களை வழங்கி வருகிறது என்றார்.
ஐடிசி ஹோட்டல் 2012இல் கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது என்றும், இதுபோன்ற முயற்சிகள் ஒரு அற்புதமான மற்றும் நிலையான எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஐடிசி ஹோட்டல் நிர்வாகம், அதனுடைய அனைத்து ஹோட்டல்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முழுவதும் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.