ஐஸ்வர்யா ராயை இல்லத்தில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட ராப்ரி தேவி...
தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராயை, தனது இல்லத்தில் அனுமதிக்க ராப்ரி தேவி ஒப்புக்கொண்டதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்றது.
ஐஸ்வர்யா மற்றும் தேஜ் பிரதாப் இருவரும் மே 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த 6 மாதங்களிலேயே கணவர் தேஜ் பிரதாப், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். இருப்பினும் அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில், மாமியார் வீட்டில் வசித்து வருவதாக ராப்ரி தேவியின் மருமகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது மாமியார் ராப்ரி தேவி கடந்த 3 மாதங்களாக உணவு வழங்கப்படவில்லை, அவரது மகள் மிசா பாரதியின் அறிவுறுத்தலின் பேரில் தன்னை சமையலறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும் ஐஸ்வர்யா குற்றஞ்சாட்டினார். தனது பெற்றோர் அனுப்பிவைத்த உணவை சாப்பிட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், ராப்ரி தேவி மற்றும் மிசா பாரதி ஆகியோர் தன்னை சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக ஐஸ்வர்யா குற்றம் சாட்டினார். சனிக்கிழமை இரவு, என்னை சித்ரவதை செய்து ராப்ரி தேவி முன்னிலையில் மிசா பாரதி என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார் என்றும் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
இந்நிலையில், தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராயை, தனது இல்லத்தில் அனுமதிக்க ராப்ரி தேவி ஒப்புக்கொண்டதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.