உதவி செய்தவரை நம்பி உயிரை விட்ட பெண்..!

உதவி செய்தவரை நம்பி உயிரை விட்ட பெண்..!

பிரேஸில் நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேஸில் நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேஸில் மரியானா பஸ்ஸா என்ற பெண் தனது காரில் ஜிம்மிற்கு வந்துள்ளார். அப்போது உடற்பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்த மரியானா தனது  காரில் பழுது ஏற்பட்டதால்,  அருகில் இருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபரும் அவருக்கு உதவி செய்துள்ளார் அதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் அப்பெண்ணை காரில் கடத்தி கொண்டு சென்றார்.

இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் தனது மகள் வீட்டுக்கு வராததால் காவல்துறையில் மரியானாவின் தாயார்   புகார் அளித்தார்.

இந் நிலையில்,    கைகள் கட்டப்பட்ட நிலையில்  மரியானாவை பிணமாக காவல்துறையினர் மீட்டனர்.

தொடர்ந்து,  காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்,   அங்குள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்த பெண்ணின் காரை சரி செய்த நபர்தான், அவரை காரில் கடத்திச் சென்றுள்ளதை  உறுதிசெய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.  

இந்நிலையில் மரியானா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுளாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததால் தான் முடிவு செய்ய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com