பீகாரில் மழை வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு… மழை தொடரும் என ஐ.எம்.டி கணிப்பு!
பீகாரில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பாட்னாவும் ஒன்றாகும். பாட்னாவில் உள்ள பள்ளிகள் செவ்வாய்க்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் மார்பளவு நீர் தேங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் படகுகள், கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
பாட்னாவில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) கணித்துள்ளது.
பலத்த மழை பெய்ததன் காரணமாக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.