தேசியம்
மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் போட்ட போலீசார்…
மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் போட்ட போலீசார்…
பின்னர் தவறு நடந்துவிட்டது என்று கூறி அபராத பில்லை வாபஸ் பெற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே நள்ளிரவில் சாலையில் வந்த மாட்டு வண்டியை மறித்த போலீசார், மோட்டார் வாகனச் சட்டப்படி பில் போட்டு அதன் உரிமையாளர் ரியாஸ் ஹாசன் என்பவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந் நிலையில், மறுநாள் காலையில் போலீஸ் ஸ்டேசன் சென்ற ரியாஸ் ஹாசன், தனக்கு ஏன் இந்தச் சட்ட்டப்படி அபராதம் போட்டீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போதுதான் தங்கள் தவறை போலீசார் உணர்ந்தனர். அதாவது மணல் அள்ளுவது குறித்த தகவல் அறிந்து அங்கு ரெய்டுக்குச் சென்ற இடத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்க முயன்று, அதற்குப் பதிலாக மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் வசூலிக்கும் பில்புக்கை பயன்படுத்தி இருப்பதை அறிந்தனர். பின்னர் தவறு நடந்துவிட்டது என்று கூறி அபராத பில்லை வாபஸ் பெற்றனர்.