தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஐதாராபாத் அரசு பங்களாவில் 11 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஐதாராபாத் அரசு பங்களாவில் 11 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
அந்த நாய்களில் ஹஸ்கி வகையைச் சேர்ந்த 11 மாத நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானது. இதனால், அந்த நாய்க்கு பால் கூட குடிக்க முடியாத அளவிற்கு சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த நாயை அருகில் உள்ள தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள் அந்த நாய்க்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால், அந்த நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்கவில்லை என அந்த நாயின் பராமரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்கவில்லை என அந்த நாயை பராமரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து அந்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.