இதுக்குலாமாயா போட்டி நடத்துவாங்க? இனி டமால் டுமீல்தான்…

இதுக்குலாமாயா போட்டி நடத்துவாங்க? இனி டமால் டுமீல்தான்…

வாயு வெளியேறுவது எல்லோருக்கும் சகஜமானது தான். இதனை நம்மை சுற்றியுள்ளவர்கள் கேலியாகவும், ஏளனமாகவும் பார்ப்பதுண்டு.

வாயு வெளியேறுவது எல்லோருக்கும் சகஜமானது தான். இதனை நம்மை சுற்றியுள்ளவர்கள்  கேலியாகவும், ஏளனமாகவும் பார்ப்பதுண்டு.

இந்நிலையில் இதனை மாற்றி யோசித்த குஜராத், சூரத் நகரை சேர்ந்த  இளைஞர்கள்,    மலக்குடல் வழியாக வெளியேறும் வாயுக்கு என ஒரு போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் செப்டம்பர் 22ம் தேதி இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமாக, நீண்ட நேரம், வலிமையாக வெளியேறும் வாயு என 3 வகையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர் யாதின் சங்கொய் கூறுகையில், ”25 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினர் முன்பு தனக்கு மிக சத்தமாக   வாயு வெளியேறியதால் அனைவரும் சிரித்தனர் என்ரும், அப்போது இதற்கு மட்டும் போட்டி இருந்தால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறினேன். 

மேலும் இந்த யோசனையை எனது நண்பர்களிடம் பகிற, அதில் முல் சங்வி இந்த போட்டியை நடத்த உதவுவதாக முன்வந்தார்” என்று தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து முல் சங்வி கூறுகையில், ”இந்த போட்டியில், தயக்கம் இல்லாமல் வாயுவை வெளியேற்ற ஒரு தளம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாக் கூறினார். அத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக இது போல வாயுவை வெளியேற்றுவதில் எவ்வித தயக்கமும் இருந்ததில்லை ஆனால் இப்போது சமூகம் வேறுவிதமான பார்வை கொண்டுள்ளது” எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்தப் போட்டி கூறித்து கூறுகையில்,  3 வகையில் இப்போட்டி நடத்தப்படும், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 60 நொடிகள் கொடுக்கப்படும் இதற்குள் அவர்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். இப்போட்டியின் நடுவராக நகைச்சுவையாளர் தேவங் ராவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருடன் ஒரு மருத்துவரும் இதனை கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 3 பேர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சுழற்கோப்பைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com