அயோத்தி பாபர் மசூதி வழக்கின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக சி.ஜே.ஐ செயலாளரிடம் ஒரு அறிக்கை கேட்கப்பட்டது.
அயோத்தி வழக்கு விசாரணையை நேரடியாக டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கோவிந்தாச்சார்யா, டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப, உச்சநீதிமன்றத்தில் வசதி இருக்கிறதா, அதற்கான கருவிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை என, கடந்த 6 ஆ,ம் தேதி குறிப்பிட்டனர்.
இந் நிலையில் அயோத்தி பாபர் மசூதி வழக்கின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக சி.ஜே.ஐ செயலாளரிடம் ஒரு அறிக்கை கேட்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணைக்குத் தேவையான தளவாடங்கள், தொழில் நுட்ப விவரங்கள் சுப்ரீம் கோர்ட் ஜெனரல் செகரட்டரி தரப்பில் தயாரிக்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.