அப்போது தலைமை நீதிபதி ரஞ்சம் கோகாய், இதுபோன்ற நிலை இருந்தால் இது மிக சீரியஸானது. தேவைப்பட்டால் காஷ்மீருக்கு நானும் செல்வேன் என்றார்.
காஷ்மீர் சென்று தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் தவிப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச், தேசிய பாதுகாப்பை மனதில் வைக்கும்போது, அங்கு இயல்பு வாழ்க்கை நிலவிட மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் இயல்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். அங்கு அசாதரண சூழல் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. மேலும், அங்குள்ள ஐகோர்ட்டைக் கூட சிலர் அணுக முடியவில்லை என்கின்றனர் என்று நீதிபதிகள் கூறினர். அப்போது தலைமை நீதிபதி ரஞ்சம் கோகாய், இதுபோன்ற நிலை இருந்தால் இது மிக சீரியஸானது. தேவைப்பட்டால் காஷ்மீருக்கு நானும் செல்வேன் என்றார்.