தேசியம்
நர்ஸ் ராஜம்மாவைக் கட்டிப் பிடித்து ராகுல் நெகிழ்ச்சி….
நர்ஸ் ராஜம்மாவைக் கட்டிப் பிடித்து ராகுல் நெகிழ்ச்சி….
நர்ஸ் ராஜம்மாவின் வீட்டுக்கு சென்று அவரை கட்டிப் பிடித்து ஆரத்தழுவி நெகிழ்ச்சி அடைந்தார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார் இந் நிலையில், இந்தியாவிலேயே ராகுல் பிறக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சர்ச்சையைக் கிளப்பினார்.
அப்போது ,கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மா என்பவர், தான் டெல்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணியாற்றிய போது, அங்குதான் ராகுல் பிறந்தார் என்றும், அதற்கான சான்றிதழ் இப்போதும் மருத்துவமனையில் உள்ளது என்றும் கூறினார்.
தற்போது வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தின் இடையே, நர்ஸ் ராஜம்மாவின் வீட்டுக்கு சென்று அவரை கட்டிப் பிடித்து ஆரத்தழுவி நெகிழ்ச்சி அடைந்தார்.