சுத்தியலால் அடித்தும் உடையாத முட்டை... குளிருடன் போராடும் ராணுவம்....

சுத்தியலால் அடித்தும் உடையாத முட்டை... குளிருடன் போராடும் ராணுவம்....
சுத்தியலால் அடித்தும் உடையாத முட்டை... குளிருடன் போராடும் ராணுவம்....

நமது நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

நமது நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்களது தூக்கத்தை தொலைத்து நம்மை பாதுகாப்பதால் தான், நாம் இங்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் சியாச்சின் பகுதியில் கடும்குளிரில் பணியாற்றும் வீரர்கள் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ தான் இணையத்தில் வலம் வருகிறது. அங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதால் உணவுப்பொருட்கள் அனைத்தும் உறைந்து காணப்படுகிறது. உறைந்த ஜூஸ் பாக்கெட், முட்டை, தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்டவை உறைந்த நிலையில் காணப்படுகிறது.

அந்த வீடியோவில், அவர்கள் சுத்தியல் மற்றும் கத்தியால் அடித்தும் அந்த உணவுப் பொருட்களை உடைக்க முடியவில்லை. குளிர்பானங்களை கூட சூடு செய்த பிறகு தான் குடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தது அனைவரையும் கலங்க வைத்தது. இந்த மாதிரியான கடும் குளிரில் வசிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல எனவும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com