முகேஷ் அம்பானி பெரும் பணக்காரர் மட்டுமல்ல. அவரும் பெரிய மனதுக்காரர்தான். முகேஷ் அம்பானியின் வலது கரம் என்று அழைக்கப்படும் அவரது நீண்டகால ஊழியர் மனோஜ் மோடி ரூ.15,00 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாகக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
நாட்டின் மிக மதிப்புமிக்க ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான அனைத்து ஒப்பந்தங்களின் வெற்றியின் பின்னணியில் முகேஷ் அம்பானிக்கு பின்னணியாக இந்த மனோஜ் மோடி இருந்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் பலமாக இருந்து வரும் எளிமையான மனிதர் மனோஜ் மோடிக்கு வெகுமதியாக, அம்பானி 22-மாடி கட்டிடத்தை வழங்கி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். மும்பையில் உள்ள மிக முக்கியப்பகுதியான நேபியன் கடற்கரை சாலையில் உள்ள இந்த மிக விலை உயர்ந்த கட்டடத்தை தனது கல்லூரி காலத்தில் இருந்து இப்போது வரை உடனிருக்கக்கூடிய மனோஜ் மோடிக்கு வழங்கி இருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் மும்பையின் வேதியல் தொழில்நுட்பத் துறையில் ஒன்றாகப் படித்தவர்கள்.
முகேஷ் அம்பானியின் தன்ந்தை திருபாய் அம்பானி 1980 களின் முற்பகுதியில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை வழிநடத்திய போது மனோஜ் மோடி அதில் சேர்ந்தார். முகேஷ் அம்பானிக்கு மட்டுமல்ல. அவரது மனைவி நீதா அம்பானிக்கும் பல ஆண்டுகால நண்பர். மனோஜ் மோடி இப்போது முகேஷ் அம்பானியின் குழந்தைகளான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானியுடன் நெருக்கமாக நட்போடு பணியாற்றி வருகிறார்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனத்தின் வழிகாட்டியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நீண்டகால ஊழியராக இருந்து வரும் மனோஜ் மோடிக்கு 1.7 லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த சொகுசு வீடு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 'பிருந்தாவனம்' என்று பெயரிடப்பட்ட பங்களா ஒரு சதுர அடிக்கு 45,100 முதல் 70,600 ரூபாய் வரை செலவில் கட்டப்பட்டது. இந்த 22 மாடி கட்டடத்தில் தளமும் 8,000 சதுர அடியில் கட்டப்பட்டது. மொத்த பரப்பளவு 1.7 லட்சம் சதுர அடி. மனோஜ் மோடி குடும்பத்தினர் வசிக்கும் இந்த வீட்டில் 175 பணியாளர்கள் உள்ளனர்.
முதல் ஆறு தளங்கள் கார் பார்க்கிங் ஆகவும், அடுத்து மனோஜ் மோடியில் அலுவலகத்திற்கு தனித் தளம், மருத்து வசதிகளுக்கென ஒரு தளமும், நீச்சல் குளம் என பிரம்மாண்டமான ஆடம்பர வசதிகளுடன் கொண்ட இந்த வீட்டை மனோஜ் மோடிக்கு வழங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.
மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி பரிசளித்த வீட்டை தலதி & பார்ட்னர்ஸ் எல்எல்பி என்கிற கட்டுமான நிறுவனம் வடிவமைத்துள்ளது. வீட்டில் சில தளபாடங்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.