கேரளா: முதல் வந்தே பாரத் ரயில் சேவை - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பு

கேரளா: முதல் வந்தே பாரத் ரயில் சேவை - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பு
கேரளா: முதல் வந்தே பாரத் ரயில் சேவை - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பு

திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும்

திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் அதிவேக ரயிலில் பயணம் சென்ற மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் பிரதமர் மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்து வைத்தது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல், ரயிலின் மற்ற பெட்டிகளுடன் இணைந்திருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

கேரளாவில், திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கிறது.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில், முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் தொடங்கி வைத்தார். அப்போது, வந்தே பாரத் ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் பிரதமர் மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.

இந்த விழாவில், கேரள மாநில கலாச்சாரத்தின்படி சட்டை அணிந்தபடி பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com