இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660- ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660-ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10,112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 7,178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா பாதிப்பிலிருந்து 9,213 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 6,660 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.