ரூ.3.200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்தியாவில் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்துத் திட்டத்தைப் பிரதமர் மோடி ஏப்.25ம் தேதி கேரளாவில் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் வாட்டர் மெட்ரோ என்பது ஒரு தனித்துவமான நகர்ப்புற வெகுஜன போக்குவரத்து அமைப்பாகும். இவை வழக்கமான மெட்ரோ அமைப்பை போல இல்லாம் புதிய அனுபவத்தையும், பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்ரை மக்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைவரும் ஒன்றையே சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக நாட்டில் மெட்ரோ இணைப்பு மற்றும் விரிவாக்க பணிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம் இயற்கை வளங்களைக் கொண்டது. இங்கு நீர்நிலைகள் அதிகம் நிறைந்துள்ளது.
இதன்காரணமாக, நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்துத் திட்டத்தைக் கேரளாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த மெட்ரோ சேவை கொச்சி நகர மக்களுக்கு அதிகப் பயனளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வாட்டர் மெட்ரோ பயணம் மூலம் மக்களுக்குச் சவுகரியம், பாதுகாப்பு, நேரம் தவறாமை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தன்மை உள்ளிட்ட மற்ற மெட்ரோவில் உள்ளதை போன்ற விஷயங்கள் உள்ளன. மேலும் புதிய வகையான அனுபவமும், பாதுகாப்பு அளிக்கக்கூடியதாவும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி நாளை டெல்லியில் தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்குச் சுற்றுபயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, டெல்லியில் இருந்து நாளை சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் பிரதமர் மோடி மத்திய பிரதேசம் மாநிலம் செல்கிறார். அங்கு ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.பின்னர் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அடுத்த நாளான ( 25ம் தேதி )கேரள மாநிலத்திற்கு 10.30 அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் 11 மாவட்டங்களை இணைக்கக் கூடிய வகையில் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். பின்னர்க் காலை 11 மணி அளவில் திருவனந்தபுரம் நகரில் ரூ.3.200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத்தொடர்ந்து குஜராத்தின் சூரத் நகர் வழியாகப் பிரதமர் மோடி சில்வாசா நகரத்திற்குச் செல்கிறார்.