அடுத்த ஆண்டு அல்லது மூன்று மாதங்களில் தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும்
கைவசம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகச் சீரம் நிறுவன தலைமை அதிகாரி அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31,258 இருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 66,170 இருந்து 67,556 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறுவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் புனேவில் இன்று பேசிய சீரம் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா, “ இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தீவிரமாகி வருகிறது. இது லேசான திரிபு தான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவர்களின் உரிமை என, தெரிவித்தார். நம்மிடம் தற்போது 50 முதல் 60 லட்சம் வரை கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு அல்லது மூன்று மாதங்களில் தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.