புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
பொழுதுபோக்கு அம்சமான திரைப்படங்களை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பதுண்டு. திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு ஏற்ப வயது வரப்புகளை கொண்டு தனித்தனியாக பிரிவுகள் உள்ளது.
இதில் தற்போது வரை மூன்று வகை தணிக்கை சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில். இனி திரைப்படங்களுக்கு ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC), இனிமேல் திரைப்படங்களுக்கு ‘U, U/A 7+, U/A 13+, U/A 16+, A‘ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐந்து வகையாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.