மிசோரத்தில் எழுத்தறிவு சதவிகிதம் அதிக அளவு உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது? என்ற ஆய்வில், மிசோரம் என தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் செயல்படும் நிர்வாக மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் பிலனியா தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது? என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், குடும்ப உறவு, வேலை சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள், வாழ்க்கை தரம், மதம், கொரோனா ஏற்படுத்திய தாக்கம், உடல்-மன நலம் சார்ந்தவை உள்ளிட்டவை குறித்து மக்களிடையே கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம் என தெரிய வந்துள்ளது.
மேலும், மிசோரத்தில் எழுத்தறிவு சதவிகிதம் அதிக அளவு உள்ளதாகவும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு படிக்கின்ற வாய்ப்புகளை இம்மாநிலத்தில் ஏற்படுத்தி தருவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் மிசோரம் இரண்டாவது இடத்தில் உள்ளதும். முதலிடத்தில் கேரளா உள்ளது குறிப்பிடத்தக்கது.