இந்திய அரசாங்கத்தால் செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை குஜராத்தில் நடைபெற உள்ளது.
செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக குஜராத் மற்றும் தமிழகத்திற்கு இடையே ‘சேலஞ்சர்ஸ் டிரோஃபி’போட்டிகள் நடக்க உள்ளன. இதில் கபாடி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால் போன்ற 38 போட்டிகளில் தமிழக வீரர்களும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் இடையேயான புராதான உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்திய அரசாங்கத்தால் செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை குஜராத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் குஜராத்துக்கு வரவிருக்கின்றனர்.
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பாய் படேல் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகளில் முழுமுனைப்போடு ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக சேலஞ்சர்ஸ் டிரோபியை வெல்வதற்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குஜராத் மற்றும் தமிழகத்திற்கு இடையே 5 விதமான விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளது. டேபிள் டென்னிஸ், நீச்சல், வாலீபால், டென்னிஸ் போன்ற போட்டிகளில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அனுபவம் மிக்க வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். மொத்தம் 216 வீரர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 108 பேரும், குஜராத்திலிருந்து 108 பேரும் கலந்துக் கொள்கிறார்கள். இதில் வெற்றி பெரும் அணிக்கு டிராபி வழங்கப்பட உள்ளது.