வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து
ஏப்ரல் 14 மற்றும் 15ம் தேதி அன்று வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், 'வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டில் உள்ள விவசாயிகளின் விழாக்கள் மற்றும் இந்தியாவின் செழுமையான, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விழாக்கள் நமது உணவளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பைப் போற்றும் வகையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாக உள்ளது.
நமது பண்டிகைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், நமது மக்களின் மகிழ்ச்சியான நல்லிணக்க உணர்வை பரவலாக்கி நம்மை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.