மாத்திரைகள், கேப்சூல்கள், இருமல் மருந்துகள், ஊசிகள், புரத பவுடர்கள், ஒப்பனை பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு எதிராக விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ்
போலி மருந்துகளை தயாரிப்பது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் (டி.ஜி.சி.ஐ.) சார்பில் அதிரடி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போலி மருந்துகளை தயாரிப்பதாக, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், கண்டறிந்ததன் பேரில் அந்நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் சோதனையில் ஜிஎம்பி (GMP) வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாசல பிரதேசத்தில் 70 நிறுவனங்கள், உத்தரகாண்டில் 45 நிறுவனங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீது போலி மருந்துகள் தொடர்புடைய அரசின் அதிரடி சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாத்திரைகள், கேப்சூல்கள், இருமல் மருந்துகள், ஊசிகள், புரத பவுடர்கள், ஒப்பனை பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு எதிராக விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டும் உள்ளன. மேலும் அவற்றின் உற்பத்தியையும் நிறுத்தும்படி ஆணையிடப்பட்டுள்ளது. நாட்டில் போலி மருந்துகள் தயாரிப்புடன் தொடர்புடைய மருந்து நிறுவனங்களில் இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.