பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் அருகே ஆற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற கணவரை கடித்து எழுத்த சென்ற முதலையிடம் இருந்து பத்திரமாக மீட்ட மனைவியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் பகுதியில் பன்னே சிங் மற்றும் அவரது மனைவி விமல் பாய் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
பன்னே சிங்- விமல் பாய் தம்பதி ஆடுகளை மேய்க்கும் தொழில் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடந்த செவ்வாய் கிழமை அன்று பன்னே சிங்கும் அவரது மனைவியும் தங்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுக்கச் சம்பல் ஆற்றுக்குச் சென்றனர்.
பன்னே சிங் ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது, திடீரென வந்த முதலை ஒன்று பன்னே சிங்கின் காலை கடித்துத் தண்ணீருக்குள் இழுக்க முயற்சித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னே சிங், கத்தி அலறி உள்ளார். சற்றுத் தொலைவில் இருந்த விமல் பாய் கணவரின் சத்தம் கேட்டு ஓடி வந்துள்ளார்.
அப்போது, கணவரின் காலை கடித்து இழுத்துக்கொண்டிருந்த முதலையைக் கையில் இருந்த தடியால் அடித்துள்ளார். ஆனாலும், முதலை தனது பிடியை விடவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் தண்ணீருக்குள் இழுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த விமல் பாய் முதலையின் கண்ணில் கையில் இருந்த கட்டையால் குத்தியுள்ளார். இதனால், முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்தது. இதையடுத்து, கணவந் மனைவி என இருவரும் பத்திரமாகக் கரைக்கு வந்தனர்.
முதலை கடித்தபோதும், தனது உயிரை பணையம் வைத்தும் கணவரை காப்பாற்றிய பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.