இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு அதனைப் பக்கெட் போட்டுவிட்டு மருத்துவமனைக்குத் தாய் ஓடிய செயல் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே வீட்டில் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பிறந்த குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள வாளி ஒன்றில் வைத்து விட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்குச் சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்களிடம் நடந்ததை அவர் கூறிய நிலையில், மருத்துவமனையில் இருந்த அதிகாரிகளிடம் அவர் நடந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற போலீசார் பக்கெட்டில் உயிருடன் இருந்த குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
பெற்ற பிஞ்சு குழந்தையைப் பக்கெட்டில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.