பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
நாடு முழுவதும் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலுடன், ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் மூலம் ரூ.40,700 கோடி வழங்கி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
ஸ்டாண்ட் அப் இந்தியா நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், அனைத்து பகுதிகளிலும் பரவலாக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
அதேபோல, இந்தத் திட்டத்தின் மூலம் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தொழில் அதிபர்களை உருவாக்கியுள்ளோம். அவர்களுக்கு, ரூ. 40,700 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பட்டியல் இன மக்களுக்கு 5,625 கோடியும், பெண்களுக்கு 33, 152 கோடியும், பட்டியல் பழங்குடியினருக்கு, 1,932 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சமூக பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளது. இதனால், நாட்டின் கீழ்மட்ட அளவில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மூலம், சொந்த தொழில் செய்ய விரும்புவர்களுக்கு எஸ்.சி.பி. வங்கி கிளை மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மாபெரும் வெற்றியையும், புதிய உச்சத்தையும் அடைந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் 40,000 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.