ரத்தினகிரி பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி எக்ஸிக்யூட்டிவ் எக்ஸ்ப்ரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. இலந்தூர் நிலையத்தை கடந்து சென்றவுடன் ரயிலில் டி-1 கோச்சில் பயணம் செய்த நபர் தன்னுடைய பையில் இருந்த இரண்டு பெட்ரோல் கேன்களை எடுத்து சக பயணிகள் மீது ஊற்றி அவர்கள் மீது தீ வைத்தார்.
அப்போது பல பயணிகள் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில், பயணிகள் அங்கும் இங்கும் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடினார்கள். இந்த சமயத்தில் ரயிலின் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட நிலையில், ரயில் கோரா புழா என்ற இடத்தில் உள்ள பாலத்தின் மீது நின்றது.
அப்போது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு தாய் தனது மகளுடன் ரயிலில் இருந்து பாலத்தின் கீழே குதித்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் மற்றொரு நபரும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் அவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் தீ வைத்த நபர் தப்பிச் செல்லும்போது விட்டுச் சென்ற பையை தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது கோழிகோடு முதல் கண்ணூர் வரையிலான இடங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது
தீ வைத்த நபர் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்தவர் என்றும் கடைசி நேரத்தில் ரயிலில் ஏறியவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ரயிலில் தீ வைத்து விட்டு அந்த நபர் சாவகாசமாக இறங்கி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சாலையில் ஓரத்தில் நின்றதும், அவரை மற்றொரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது.
எனவே அந்த நபர் மாவோயிஸ்ட் தீவிரவாதியாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேக நபரின் புகைப்படம் சி.சி.டி.வி காட்சி ஆதாரங்களின்படி வரைந்து வெளியிடப்பட்டது. அதைக் கொண்டு போலீசார் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ரயிலுக்கு தீ வைத்ததாக சந்தேகப்படும் முக்கிய குற்றவாளி மகாராஷ்டிராவில் செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.