முறையற்ற நட்பு; ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த பரிதாபம்

முறையற்ற நட்பு; ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த பரிதாபம்
முறையற்ற நட்பு; ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த பரிதாபம்

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

திருமணமான பெண்ணை வீட்டை விட்டுக் கூட்டிச் சென்ற இளைஞரின் மூக்கை அறுத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் திருமணமான பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறி குடும்பம் நடத்திய ஆணின் மூக்கை அறுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம்,  நாகௌர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை, பெண்ணின் உறவினர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். பர்பத்சரில் வசிப்பவர் ஹமீத். 
இவர் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் ஊரைவிட்டு வெளியேறி அஜ்மீரில் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களை தேடிக் கண்டுபிடித்தப் அப்பெண்ணின் குடும்பத்தினர், ஹமீத்தையும் அந்த பெண்ணையும் தாக்கியுள்ளனர். அத்தோடு ஹமீத்தின் மூக்கையும் வெட்டியுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். "ஒரு திருமணமான பெண் தனது காதலரான ஹமீத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதை அறிந்த பெண்ணின் தந்தை, அவர்கள் இருவரையும் பிரித்தார். பின்னர் பெண்ணின் சகோதரர்கள் மற்றும் தந்தை ஹமீதின் மூக்கை வெட்டி அதை வீடியோவாக பரப்பினார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று நாகௌர் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஜோஷி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com