புதுடெல்லி: 'எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன்' - ராகுல்காந்தி

புதுடெல்லி: 'எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன்' - ராகுல்காந்தி
புதுடெல்லி: 'எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன்' - ராகுல்காந்தி

நான் காங்கிரஸ் வழியில், அதன் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன்

'என் வீட்டிற்கு எத்தனை முறை போலீசாரை அனுப்பினாலும் சரி, அவர்கள் மூலம் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அதற்கு நான் பயப்படப்போவதில்லை' என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்தார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், 'வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், 'பா.ஜ.கவினர்தான் இந்தியா என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். 

இதனால் அவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். பிரதமர் மோடி ஒரு இந்திய குடிமகன் மட்டுமே, அவர்தான் இந்தியா என்று கூற முடியாது. 

எனவே,  பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க. குறித்தும் விமர்சனம் செய்வது இந்தியாவை விமர்சனம் செய்வது ஆகாது. அது அவர்களது செயல்களை விமர்சனம் செய்வதாகத்தான் கருத வேண்டும். 

நாட்டின் சுதந்திரமான அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகின்றது. 

எனது வீட்டிற்கு எத்தனை முறை போலீசாரை அனுப்பினாலும் சரி, அல்லது என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, நான் யாருக்கும் பயப்படமாட்டேன். நான் காங்கிரஸ் வழியில், அதன் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com