டெல்லி அரசின் பட்ஜெட்டை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ம் தேதி தொடங்கியது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதால், அவரிடம் இருந்த நிதித்துறை கெஹ்லோட்க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, கடந்த 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக பட்ஜெட் அனுப்பப்பட்டது.
இருப்பினும், ஒரு சில காரணங்களுக்காக மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி தர மறுத்துவிட்டது.
ஆம் ஆத்மி அரசில் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் சிலர் பல்வேறு குற்ற வழக்குகளில் அமலாக்கத்றை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "'நிதித்துறை அமைச்சர் கெஹ்லோட் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்தார்.
இதற்காகக் கடந்த மார்ச் 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இருப்பினும், ஒரு சில காரணங்களுக்காக டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
டெல்லியின் பட்ஜெட்டை தாமதப்படுத்தியதில் டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதிச்செயலாளரின் பங்கு உள்ளது.
எனவே, அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட வேண்டியர்களில் மிகவும் முக்கியமானவர்கள்" என்று குற்றம் சாட்டினார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், அங்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில், ஆம் ஆத்மி அரசுக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.