தேசியம்
கொச்சி தீ விபத்து சம்பவம்: '500 கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்' -பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
கொச்சி தீ விபத்து சம்பவம்: '500 கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்' -பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
மாநில அரசுக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என கூறினார்.
கேரளா மாநிலம், கொச்சியில் குப்பை கிடங்கு தீ ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம். கேரளா கூடுதல் தலைமைச் செயலாளர் வேனுவை நேரில் அழைத்து விசாரித்தது. அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி ஏ.கே.கோயல், கேரள மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த சம்பவத்திற்கு மாநில அரசின் மோசமான நிர்வாக சீர்கேடு முழு காரணம் என்றும் இதில் மாநில அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதில் தப்ப முடியாது என கடுமையான விமர்சனம் செய்த அவர், இது தொடர்பாக மாநில அரசுக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என கூறினார்.