பெருந்தன்மையாக முதல்வர் வேண்டாம் என கூறிவிட்டார்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காத தலைமை செயலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவையில் கேள்வி நேரத்தில், பாதாள மின்புதைவட கேபிள் தரமில்லாமல் போடப்பட்டுள்ளது என்றும், இதில் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகவும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது.
இதற்கு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி அருண் என்பவர் தான் முழு காரணம். ஊழல் என்பது தலைமை செயலகம் வரை சென்று விட்டது. ஊழல் செய்யும் ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து ஊழல் செய்த பணத்தை வசூலிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சுயேட்சை எம்.எல்.ஏ நேரு ஆகியோர் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாததால் அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் மத்தியில் இருந்து வரும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் அமைச்சர்களை மதிப்பதில்லை என புகார் கூறினார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்தும் பேசுகிறார் என அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாததை அவையில் வேதனையுடன் குறிப்பிட்டடார்.
இதற்கு சபாநாயகர் செல்வம், முதல்வர் ரங்கசாமி காலத்தில் தான் அனைத்து அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.ஆனால் இப்போது செய்ய முடியவில்லை. அவர் மிக மனவேதனையில் இருக்கிறார் என்றும், பல விஷயங்களுக்கு தலைமை செயலர் தடையாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பெருந்தன்மையாக முதல்வர் வேண்டாம் என கூறிவிட்டார். இருப்பினும் சட்டமன்ற கூட்டம் முடிவதற்குள் முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முடிவு காணப்படும் என தெரிவித்தார்.