நாடு முழுவதும் உள்ள 775 நீதிபதிகளில் 106 பேர் பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்
நாட்டில் எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளும் தொடர்ந்து 5ஆவது நாளான இன்றும் முடங்கியது. மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கியதால் கூட்டத்தொடரில் நடைபெற வேண்டிய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை
முதல் நாளிலிருந்தே அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது குறித்து பேசியும் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன.
அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும், லண்டனில் இந்தியாவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசியதாகக் கூறி, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டும் வந்ததால் திங்கள்கிழமை (பிப்ரவரி 20) காலை 11 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் எத்தனை பெண் நீதிபதிகள் உள்ளார்கள் என்று பாஜக எம்பி ராஜேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உச்சநீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் நியமித்திருப்பதாகவும், துணை நீதிபதிகளில் 30 சதவீதம் பெண்கள் மட்டுமே உள்ளனர் என்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.
கடந்த மாதம் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தில் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. உச்சநீதிமன்றம் தற்போது, 27 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதுவரை 488 வழக்குரைஞர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியுள்ள நிலையில், அதில் 19 பேர் மட்டுமே பெண்கள்.அதுமட்டுமில்லாமல், நாடு முழுவதும் உள்ள 775 நீதிபதிகளில் 106 பேர் பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி உயர்நீதிமன்றங்களின் பெண் நீதிபதிகள் அதிக எண்ணிக்கையிலான 13 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதிகளும், கௌஹாத்தி, ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், லடாக் ஜார்கன்ட், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, பாட்னா, உத்தரகண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லை. உயர்நீதிமன்றங்களில் மொத்தமாக 9.5 சதவீத பெண்கள் மட்டுமே உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், தற்போது வரை நாட்டில் எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.