இரண்டு திருமணங்கள்; தீர்வு கொடுத்த மனைவிகள் - குடும்ப நீதிமன்றம் அளித்த நூதன தீர்ப்பு

இரண்டு திருமணங்கள்; தீர்வு கொடுத்த மனைவிகள் - குடும்ப நீதிமன்றம் அளித்த நூதன தீர்ப்பு
இரண்டு திருமணங்கள்; தீர்வு கொடுத்த மனைவிகள் - குடும்ப நீதிமன்றம் அளித்த நூதன தீர்ப்பு

அந்த மூவரும் சேர்ந்து முடிவெடுக்க நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தில் அவ்வப்போது சுவாரஸ்யமான வழக்குகள் பதிவாகின்றன. வேடிக்கையான, வினோதமான வழக்குகள் அவ்வப்போது வருவதுண்டு. குடும்பத் தகராறுகள் எதுவாக இருந்தாலும், பல வழக்குகள் பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு வெளியிலேயே தீர்க்கப்பட்டுவிடும். மத்தியப் பிரதேசம், குவாலியரில் இதுபோன்ற ஒரு தனித்துவமான வழக்கு வந்துள்ளது. 
28 வயதான சீமா ஹரியானாவின் குருகிராமில் பணிபுரியும் பொறியாளர் ஒருவரை 2018 -ல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள், தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். 2020 ஆம் ஆண்டில், கொரோனா ஊரடங்கால் ​​சீமாவை அவரது சொந்த ஊரான குவாலியருக்கு அழைத்துச் செல்ல கணவர் முடிவு செய்தார். அதன்படி அங்கு விட்டு திருந்ம்பிய அவர் நீண்ட காலமாக சீமாவை மீண்டும் அழைத்து வரவில்லை. 
அவர்களின் நீண்ட காலப்பிரிவில் கணவருக்கு அவரது அலுவலக சக ஊழியர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் காலப்போக்கில் நெருக்கமாகி, ஊரடங்கின்போது போது ஒன்றாக வாழத் தொடங்கினர். அவர்களின் காதல் பந்தம் மிகவும் வலுவாக வளர்ந்தது. அந்தக் கணவர் தன்னுடன் பணியாற்றிய பெண்ணையும் திருமணம் செய்ய முடிவு செய்தார். அப்படி இரண்டாவது திருமணம் செய்த மனைவிக்கு ஒரு மகளும் இருக்கிறாள்.
முதல்மனைவி சீமா தனது கணவனின் இரண்டாவது திருமணம் பற்றி அறிந்ததும், உடனடியாக குருகிராம் சென்றார். அங்கு நிலைமையை புரிந்து கொண்டவர் கணவனுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு மீண்டும் குவாலியருக்கு திரும்பிய சீமா தனது பிள்ளையின் வளர்ப்பிற்காக கணவரிடம் பண உதவி பெற குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்தார். அப்போது அந்த மூவரும் சேர்ந்து முடிவெடுக்க நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது.
அதன்படி அங்கு இரண்டு பெண்களும் ஒரு தீர்வு கண்டனர். ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து வாழ முடிவு செய்தனர். அதேவேளை வாரத்தில் 1 நாள் மட்டும் கணவர் விருப்படி எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அவர் வெளியில் தனிமையாகக் கூட இருக்கலாம் என முடிவு செய்து மூவரும் சம்மதித்தனர். இதனை நீதிமன்றத்தில் கூறியதால் அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com