இசைக் கலைஞர்கள் யானையைப் பார்த்து பயந்து, அங்கும் இங்கும் ஓடினர்
கேரளாவில் கோயில் திருவிழாவில் இசையைக் கேட்டு பயந்து ஓடிய யானை, மதில் சுவரைத் தாண்டி, இருசக்கர வாகனங்களை எட்டி உதைத்து தப்பி ஓடும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரில் வாதனப்பள்ளியில் பனகாபரம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் விழாவையொட்டி, கணபதி என்ற யானை கொண்டு வரப்பட்டது.
திருவிழாப் பந்தலில் இருந்த யானைக்கு பாகன் தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு இசைக்கப்பட்ட இசையை கேட்டதும் யானை மிரண்டு ஓடத் தொடங்கியது.
யானை மிரண்டு ஓடுவதைக் கண்டு அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் மேளதாளம் வசித்து கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடினர். மிரண்டு ஓடிய யானை அங்கிருந்த மதில் சுவரை தாண்டி குதித்தும், அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை தள்ளி விட்டு விட்டும் ஓடியது.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஓடிய யானையை , பாதுகாப்புப்படை பிரிவினர் மாம்புள்ளிகாவு கோவிலுக்கு அருகில் லாவகமாக பிடித்தனர். இதனால், கோவில் திருவிழாவுக்கு வந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.