தகுதி அளவுகோல்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட விலக்குகளை ரயில்வே மீண்டும் அமல்படுத்த உள்ளது. இதனுடன், தகுதி அளவுகோல்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவிர, டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடி சில கேடகரி மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ரயில்வே வாரியத்தின் கூற்றுப்படி, மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது, இதில் மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக் கொண்டு இந்த சலுகைகளின் செலவைக் குறைக்க யோசனை உள்ளது. தற்போது வரை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
தகவலின்படி, ரயிலில் பயணிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் சராசரியாக 53 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனுடன், திவ்யாங், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல வகையான சலுகைகள் கிடைக்கும்.
மக்களவையில், ரயில்வே அமைச்சரிடம், ரயில்வே சலுகை குறித்து, ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை, ரயில்வே மீண்டும் வழங்குமா என, கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது., 2019-20 ஆம் ஆண்டில், பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 59,837 கோடி ரூபாய் மானியமாக ரயில்வே வழங்கியுள்ளது. இது தவிர, ஸ்லிப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக நீண்ட காலமாக ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு சீனியர் சிட்டிசன் என்ற சலுகை வழங்கப்பட்ட வந்தது. இதன் மூலம் ரயிலிகளில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் மூத்த குடிமக்கள் பயணம் மேற்கொள்வதற்காக டிக்கெட் புக்கிங் செய்யும்போது அவர்களுக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 சதவீதம் வரை டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது.