பணத்துக்காக என்ஜினியரை தாக்கிய கொள்ளையர்கள் பின்னர் அவருக்கு புது சட்டை வாங்கிக் கொடுத்தனர்.
பணத்துக்காக என்ஜினியரை தாக்கிய கொள்ளையர்கள் பின்னர் அவருக்கு புது சட்டை வாங்கிக் கொடுத்தனர்.
பெங்களூரை சேர்ந்த என்ஜினியர் கின்கார் குமார் தாகூர் என்பவர் அட்டிபெட்டே என்ற பகுதியில் தனியாக சென்றார். அவரை 4 பேர் கொண்டு கும்பல் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தது. ஆள் இல்லா இடத்தில் அந்த என்ஜினியரை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்தது.
மேலும் என்ஜினியர் கையில் உள்ள ஏ.டி.எம். கார்டை பிடுங்க முயன்றது. அதில் பணம் கிடையாது என்று என்ஜினியர் கூறினார். உடனே அந்த என்ஜினியரை 4 பேரும் சரமாறியாக தாக்கினர். இதில் அவருக்கு ரத்தம் வடிந்தது. உடனடியாக மனம் மாறிய கொள்ளையர்கள் புது சட்டை ஒன்றை என்ஜினியருக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுபற்றி என்ஜினியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.