திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த விமான பணிப்பெண் முகத்தில் கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த விமான பணிப்பெண் முகத்தில் கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி கொடிஹல்லி போலீசார் தெரிவிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜலஹல்லியை சேர்ந்தவர் அஜய் குமார் என்கிற ஜாக்கி. இவர் 27 வயது விமான பணிப்பெண்ணை பல மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் தான் திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.
அதற்கு அந்த பெண் விருப்பமில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டார். ஆனால் விடாமல் துரத்திய அஜய், அந்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தினார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறினார். அவர்கள் போலீசில் புகார் கூறினர். இதுதொடர்பாக பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி அஜய்க்கு தெரியவந்தது.
சம்பவத்தன்று மாலை 4.30 மணிக்கு விமான பணிப்பெண் வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அதனை வழிமறித்த அஜர் அந்த பெண்ணின் காதை அறுத்துள்ளார். பின்னர். முகம் உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
வாகன ஓட்டுனர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கழுத்து, காது, முகம் என்று வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து அஜய் கைது செய்யப்பட்டான். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.