போலி சீக்கியர்.. போலி டர்பன்… ஆன்லைன் நிறுவனத்தால் குழப்பம்!!

போலி சீக்கியர்.. போலி டர்பன்… ஆன்லைன் நிறுவனத்தால் குழப்பம்!!

சீக்கியர்களின் டர்பனை விதவிதமான கலரில் விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனத்தை மக்கள் குற்றம் சாட்டினர்.

சீக்கியர்களின் டர்பனை விதவிதமான கலரில் விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனத்தை மக்கள் குற்றம் சாட்டினர்.

சீக்கியர்கள் தலையில்  டர்பன் அணிவார்கள்.   இது அவர்களின் கலாச்சாரத்திற்கான எடுத்துக்காட்டாகும். 

குச்சி என்கிற அமெரிக்க ஆன்லைன் நிறுவனம் விதவிதமான நிறங்களில் டர்பன்களை தயாரித்து  விலைப் பட்டியலையும் வெளியிட்டது. ஒரு தலைப்பாகையின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 56 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இது சீக்கியர்களை கோபமடையச் செய்துள்ளது. இதுபோன்ற தலைப்பாகை அவர்களிடம் வரவேற்பை பெறவில்லை. வீட்டில் வடிவமைக்கப்படும் டர்பன்களையே அவர்கள் விரும்புகின்றனர்.

இதுபற்றி சீக்கியர்கள் தங்கள் வலைதள பதிவில், தலைப்பாகை விற்பனைக்கான ஒரு  பொருள் கடையிது. இது மத சம்மந்தப்பட்டது. இதனை சீக்கியர்கள் புனிதமாக கருதுகிறார்கள். இதற்காக நாங்கள் தனிப்பட்ட துணியை உபயோகிக்கிறோம். 

அந்த தலைப்பாகையை எப்படி மடித்து கட்டுவது என்பது எங்களுக்குதான் தெரியும். ஆனால் இந்த ஆன்லைன் விற்பனை கடையில் வாங்கி உபயோகிப்பவர்களை போலி சீக்கியர்கள் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com