நாக்பூரில் உள்ள ஹல்டிராம் என்ற பிரபல உணவகத்தில், யஷ் அக்னிகோத்ரி என்பவர், தனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றார். அவர் சாம்பார் வடை ஆர்டர் கொடுத்தார்.
நாக்பூரில் உள்ள ஹல்டிராம் என்ற பிரபல உணவகத்தில், யஷ் அக்னிகோத்ரி என்பவர், தனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றார். அவர் சாம்பார் வடை ஆர்டர் கொடுத்தார்.
அவருக்கு வந்த சாம்பார், வடை தட்டில், செத்த பல்லி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சாம்பார் வடையில் கிடந்த செத்த பல்லியை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அவர் இதுகுறித்து, ஹோட்டர் மேனேஜரிடம் முறையிட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சமையல் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஜன்னல் திறந்துகிடந்துள்ளது தெரியவந்தது. அந்த ஜன்னல் வழியாக சாம்பாரில் பல்லி விழுந்திருக்கலாம் என உணவுத் துறை ஆணையர், அந்த ஹோட்டலுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, யஷ் அக்னிகோத்ரி, தனது குடும்பத்தினருடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்தார். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சாம்பாரில் பல்லி விழுந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.