100 கார்களை ஆட்டையப் போட்ட பொம்மை துப்பாக்கி கொள்ளையர்!!

100 கார்களை ஆட்டையப் போட்ட பொம்மை துப்பாக்கி கொள்ளையர்!!
100 கார்களை ஆட்டையப் போட்ட பொம்மை துப்பாக்கி கொள்ளையர்!!

டெல்லியில் பல ஆண்டுகளாக கார்களை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில்  100க்கும் அதிகமான கார்களை திருடிய திருடனையும் அவனது கூட்டாளியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

இரண்டு திருடர்களும்  3 போலீஸ் அதிகாரிகளை இரும்புக் கம்பியால் அடித்து காயப்படுத்திய போது மற்றொரு போலீஸ் அதிகாரி அவரை கீழே தள்ளி பிடித்துள்ளர் 

அப்போது தான் இவர்கள் பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தி இத்தனை நாள்,  கார்களை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. 

மேலும் இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் பல நாட்களாக பிடிபடாமல் இருந்த திருடன், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது அடையாளத்தில் இருந்து பெயர், முகவரியை மாற்ற முற்பட்ட போதே அவரை கண்டுபிடித்ததாக கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com