தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் தான் கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் தான் கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறது.
அவர் மஞ்சள் நிற சேலையுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் தான் அது.
அவருடைய பெயர் ரீனா திவேதி என்றும், இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி என்றும் வேகமாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது.
ஒரே நாளில் பிரபலமான இருவருக்கு பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாம்.
ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13வது சீசனில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் உடனே தயாராகி விடுவேன் என்கிறார் இந்த அரசு அதிகாரி.
அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.