டெல்லியில் குறைவான வாக்குப் பகுதி! ரன்பீர் சிங் வேதனை!

டெல்லியில் குறைவான வாக்குப் பகுதி! ரன்பீர் சிங் வேதனை!
டெல்லியில் குறைவான வாக்குப் பகுதி! ரன்பீர் சிங் வேதனை!

டெல்லியில், குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில், குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது  ஏமாற்றத்தை அளித்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில், கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 56.47% வாக்குகள் பதிவாகின. 

இதேபோல், வடகிழக்கு டெல்லியில் 63.45%, சாந்தினி சவுக்கில் 62.69%, மேற்கு டெல்லியில் 60.64%, தெற்கு டெல்லியில் 57.3%, கிழக்கு டெல்லியில் 61.95% வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார். 

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியில் 65% பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் தற்போது 61 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்களித்துள்ளனர். 

தேர்தல் விழிப்புணர்வுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டதாகவும், ஆனால் குறைவான வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com